டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு போலீஸ் வாகனங்கள் அணிவகுக்க முதலமைச்சருக்குக் கொடுக்கும் அளவுக்கு உரிய மரியாதை கொடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரும் அமித்ஷாவும் இ.பி.எஸுக்கு என்ன மாதிரியான முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் கொடுக்கின்றனர் என்பதை டெல்லி சந்திப்பு உணர்த்தியுள்ளதாகக் கூறினார்.
