தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்து, அக்., 26ம் தேதிக்கு பின், மீண்டும் கனமழை துவங்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் குறைந்ததால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், கிழக்கு கடலோர பகுதிகளில் வரும் நாட்களில் மழை கிடைக்க வாய்ப்புள்ளது’ என பி.பி.சி., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
